நாச்சியார்கோவில் சமத்தனார்குடி விசாலாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 5 July 2023

நாச்சியார்கோவில் சமத்தனார்குடி விசாலாட்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது.


கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சமத்தனார்குடி விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர், பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார், தர்மசாஸ்தா ஐயப்பன் ஆகிய மூன்று  ஆலய மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.


கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் சமத்தனார்குடி அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசாலாட்சி அம்மன் சமேத காசி விசுவநாதர்,  பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார் , தர்மசாஸ்தா ஐயப்பன் ஆகிய ஆலயங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் கடந்த இரண்டாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு தினமும் காலை மாலை என இருவேளைகளும் யாக பூஜைகள் நடைபெற்று வந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நிறைவுற்று மகாபூர்ணாகஹூதி தீப ஆராதனை நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து மல்லாரி வாத்தியங்கள் இசைக்க புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு அய்யனார்,  ஐயப்பன் , ஆலயங்களைத் தொடர்ந்து விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad