நாச்சியார் கோவில் குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வேண்டும்; சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேச்சு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 6 July 2023

நாச்சியார் கோவில் குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வேண்டும்; சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேச்சு.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் கட்சி நிதி அளிப்பு த நிகழ்ச்சி நாச்சியார் கோவில் கடைத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல் தலைமை வகித்தார் நாச்சியார்கோவில் கிளைச் செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால் ஆர்.மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் உ.வாசுகி பேசும் போது, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு புவிசார் குறியீடு பெற்று அந்தஸ்தில் உள்ள குத்துவிளக்கு தொழிலாளர்களுக்கு நிரந்தர வருமானமோ ஓய்வூதியமோ இல்லாத சூழ்நிலையில் வாழ்நாள் முழுவதும் பணி செய்து ஒரு பணி பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறார்கள் குத்து விளக்கு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பும் பணி பாதுகாப்பும் ஏற்படுத்த வேண்டும் அதேபோல அடிப்படை வசதிகளையும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வைக்கிற மக்கள் கோரிக்கைகளை திமுக தோழர்கள் அரசு கவனத்திற்கு கொண்டு போக வேண்டும் என பேசினார்.


நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தருமையன், கண்ணன், ரங்கசாமி, லெனின் பாரதி, ஆனந்தன், லதா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜி.முருகன் மாத்தூர் கிளை செயலாளர் ஆரோக்கியதாஸ் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரேம்நாத் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் என்.சத்யராஜ் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர், இறுதியாக சரவணன் நன்றி தெரிவித்தார்


முன்னதாக மாத்தூரில் இருந்து செங்கொடி பேரணி இசை முழங்க சிலம்பாட்ட கலைஞர்கள் கலை நிகழ்ச்சியுடன் அணிவகுத்து வந்தனர், கூட்டத்தில் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனை 24 நேரமும் மருத்துவரை பணியமர்த்தி உயிர்காக்கும் மருந்துகளும் மருத்துவ உபகரணம் வழங்கிட வேண்டும். நாச்சியார்கோவில் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்திட வேண்டும் உலகப் பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் குத்து விளக்கு தொழிலை பாதுகாத்திட வேண்டும். 


நெல் பருத்திக்கான அரசு கொள்முதல் நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிரந்தரமாக அமைத்திட வேண்டும். நாச்சியார்கோவில் அருகே விவசாய கிராமங்கள் சூழ்ந்த மாத்தூர் பகுதியை மையமாக வைத்து கால்நடை மருத்துவமனை மற்றும் அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்து உடற்பயிற்சி ஆசிரியர் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad