தஞ்சையில் பரதநாட்டிய அரங்கேற்றம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 31 July 2023

தஞ்சையில் பரதநாட்டிய அரங்கேற்றம்.


தஞ்சாவூர் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சார கழகம்,தஞ்சாவூர் பாவுபிள்ளை பரதநாட்டியப் பள்ளி குழுவின் சார்பில் சங்கீத நாடக அகடாமி  விருத்தாளர் கலைமாமணி தஞ்சாவூர் குரு  ஹேரம்ப நாதன் அவர்களின் மாணவி  செல்வி த.ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய அரங்கேற்ற விழா தஞ்சாவூர் சங்கீத மஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் முத்த இளவரசர் எஸ். பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமை  தாங்கினார். திருவையாறு  அரசர் கல்லூரி(பணிநிறைவு) முதல்வர்  முனைவர் சண்முக செல்வ கணபதி முன்னிலை வகித்தார். குரு சந்திரசேகரன் கிட்டப்பா, குரு சிவகுமார் சிவானந்தம், தஞ்சாவூர் பரதநாட்டிய கலைஞர்கள் சங்கம், தலைவர் குரு திருமதி அருணா சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். 

முன்பாக செல்வி த.ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலையை அரங்கேற்றுயமைக்காக 'தலைக்கோலி' என்ற விருதை வழங்கி  பாராட்டி கௌரவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை நட்டு வாங்கம் அமைத்து வழி நடத்தியவர் தஞ்சை பெரிய கோயில் சின்ன மேளம் விழா குழு தலைவர் ஹரிஹரன் ஹேரம்ப நாதன் தஞ்சாவூர் பரதநாட்டிய கலைஞர்கள் சங்க செயலாளர் க. வஜ்ரவேல்ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad