கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் தஞ்சை மண்டல நிர்வாகி ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் இராம. நிரஞ்சன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ராகவன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக தேசியத் துணைத் தலைவரும் மாநில தலைவருமான பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் மூன்று மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment