ஒன்றிய மாநாட்டில் சங்க மாவட்ட செயலாளர் சி.பக்கிரி சாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் வி.ராஜமாணிக்கம், சிபிஐ ஒன்றிய செயலாளர் பி.ஏ.கருப்பையா, மாவட்ட குழு உறுப்பினர் து.பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ், சிபிஐ நகர செயலாளர் எம்.மூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் கருணாமூர்த்தி, சிபிஐ ஒன்றிய துணை செயலாளர் சி.வீரமணி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரவி, ஏ ஐ டி யு சி மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மற்றும் நீலகண்டன், கருப்பையன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றிய தலைவராக பி.ஏ.கருப்பையா, செயலாளராக மு.சித்திரவேலு, பொருளாளராக மைக்கேல்ராஜ், துணை தலைவராக பழனிவேல், துணை செயலாளராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்.
- பேராவூரணி பகுதியில் குடிமனைபட்டா கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். பேராவூரணி ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் 1 நிமிடம் நின்று செல்ல வேண்டும்.புறம்போக்கில் குடியிருக்கும் ஏழை மக்கள் வாழும் வீடுகளை மாற்று இடம் கொடுக்காமல் அப்புறப்படுத்த கூடாது.
- 100 நாள் வேலைக்கு ரூபாய் 600 சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும்.பேராவூரணி பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டில் என்பிஹச் என தவறாக ஏழைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை செய்து ஏழைகளுக்கு பெண்கள் உரிமை தொகை வழங்க வேண்டும்.
- ஏழை விவசாயிகள் வீடு கட்ட ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- செய்தியாளர் த.நீலகண்டன்.
No comments:
Post a Comment