பேராவூரணியில் விரைவில் கொப்பரை கொள்முதல் நிலையம் - எம்எல்ஏ நா.அசோக்குமார் பேச்சு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 11 July 2023

பேராவூரணியில் விரைவில் கொப்பரை கொள்முதல் நிலையம் - எம்எல்ஏ நா.அசோக்குமார் பேச்சு.


பேராவூரணியில் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், விரைவில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது என குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் இடுபொருட்கள் வழங்கும் துவக்க விழாவில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார்திருமண மண்டபத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், இடுபொருட்கள் வழங்கும் துவக்க விழா, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) எஸ்.ஈஸ்வர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி முன்னிலை வகித்தார். 


பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) எஸ்.ராணி வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் வே சுஜாதா தொழில்நுட்ப திட்ட விளக்க உரையாற்றினார் நிகழ்ச்சியில், திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 


விழாவை துவக்கி வைத்து பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களுக்கு என தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. கடைமடை வரை தண்ணீர் தங்கு தடையின்றி சென்று வருகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக விளைச்சல் பெற்று பயன்பெற வேண்டும். மேலும், பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விரைவில் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து விவசாயிகள் சிலர் பல்வேறு கோரிக்கைகள், ஆலோசனைகளை முன்வைத்து பேசினர். அதற்கு வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். நிறைவாக உதவி விதை அலுவலர் அ. முருகேசன் நன்றி கூறினார். இந்த விழாவில், ஏராளமான விவசாயிகள், வேளாண் உதவி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 23 பேருக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்களும், 6 பேருக்கு சான்று பெற்ற உளுந்து விதைகளும், 7 பேருக்கு சான்று பெற்ற கடலை விதைகளும் வழங்கப்பட்டது. முன்னதாக வேளாண் பொருட்கள், விதைகள், இயற்கை உரங்கள், பயிர் ஊக்கிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட இடுபொருட்களை வழங்கினார்


- செய்தியாளர் த.நீலகண்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad