தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான அறந்தாங்கி சாலையில் 43 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு இருந்தது. இன்று 43 பயனாளிகளுக்கு வீட்டு மனைகள் அடையாளம் காட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் திறந்து வைத்தார்.வட்டாட்சியர் சுகுமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், சேது பாவா சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment