தஞ்சாவூரில் ரூ. 133.56 கோடியில் 13 திட்டப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 28 July 2023

தஞ்சாவூரில் ரூ. 133.56 கோடியில் 13 திட்டப் பணிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்.


தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநாட்டு மையக் கட்டடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  மாநகராட்சி திட்டப் பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ. 10.46 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம், ரூ. 61.79 கோடியில் மாநாட்டு மையக் கட்டடம், அருளானந்த நகரில் ரூ. 11.50 கோடியில் ஸ்டெம் பூங்கா, காந்திஜி சாலையில் ரூ. 15.61 கோடியில் காந்திஜி வணிக வளாகம், அண்ணா சாலையில் ரூ. 3 கோடியில் வணிக வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தாா்.

இதேபோல, கவாஸ்காரத் தெரு அருகே ரூ. 1.44 கோடியில் மேம்படுத்தப்பட்ட அழகி குளம், கரந்தையில் ரூ. 2.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட கருணாசாமி குளம், பெரியகோயில் அருகே ஆம்பி என்கிற நவீன கலையரங்கமாக மாற்றப்பட்ட பெத்தண்ணன் கலையரங்கம், சிராஜூதீன் நகரில் ரூ. 15.69 கோடியில் சூரிய ஒளி மின் நிலையம், ரூ. 7.32 கோடியில் 14 மாநகராட்சி பள்ளிகளை பொலிவுறு பள்ளிகளாக மேம்படுத்துதல் ஆகியவையும் திறக்கப்பட்டன.


மேலும், தேசிய நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 1.50 கோடியில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி புற்றுநோய் வாா்டு, தீப்புண் வாா்டு பகுதியில் இரு நோயாளிகள் உடனிருப்போா் தங்குமிடம், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ரூ. 1.50 கோடி மதிப்பில் நோயாளிகள் உடனிருப்போா் தங்குமிடம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டன.


இதையடுத்து, பொது நிதியிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள மாநகராட்சி ஆணையா் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இந்த விழாவில் மொத்தம் ரூ. 133.56 கோடி மதிப்பில் 13 பணிகள் திறக்கப்பட்டது மட்டுமல்லாமல், ஒரு பணிக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.


விழாவில், அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், எ.வ. வேலு, எஸ்.எஸ். சிவசங்கா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா. காா்த்திகேயன், நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் எஸ். சிவராசு, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மக்களவை உறுப்பினா்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், ஆ. ராசா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் வரவேற்றாா். நிறைவாக, மேயா் சண். ராமநாதன் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

Post Top Ad