தற்போது இந்த பாசன வாய்க்கால் என்பதுநடைபாதையாக மாறிவிட்டது, இது அப்பகுதியில் வசிக்க கூடிய மக்களுடைய பயன்பாட்டின் நடை பாதையாக மாறிவிட்டது. இதன் வழியாகத்தான் அப்பதியில் வசிக்க கூடிய வீடுகளுக்கு செல்லக்கூடிய நிலையும் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதி நடப்பாதையை ஒரு சாரார் அடைத்து மற்றவர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு பாதையை முள்வேலியிட்டு அடைத்து தன் வசம் வைத்துள்ளார். என்று தெரிய வருகின்றது, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு இது குறித்து மனு மூலமாக தெரிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்தப்பாடு இல்லை, இச்செயல் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையாக இருக்கின்றது.
இது குறித்து திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில், நடுக்காவேரி பிற்காவிற்காக நடைபெற்ற, சமா பந்தியில், 11.5.2023 அன்று மனு கொடுக்கப்பட்டு, அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நடைப் பாதைக்கு இடையூறாக உள்ள மரத்தினைமுழுமையாக உடனடியாக வெட்டப்பட வேண்டும் எனஉத்தரவு வழங்கி உள்ளார்கள். இதுவரை இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து,தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் குறை தீர்க்கும் நாளான,5.5.2023 இன்று கொடுக்கப்பட்டுள்ள மனுவில் நடைபாதைக்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்றப்பட வேண்டும் எனவும், நீண்ட நாட்களாக தொடரும் இப் பிரச்சனைக்கு உடன் மாவட்ட ஆட்சியர் தீர்வு காணப்படும் வேண்டுமெனவும் . இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment