தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு இன்று 05-06-2023 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் VAO- சமுகநலன் தோழமை குழு அமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் விஜயபாஸ்கர் தலைமையில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் பை கொடுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் கும்பகோணம் கோட்டாட்சியர் திருமதி.பூரணிமா கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு மஞ்சள்பை, மரகன்றுகள் வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் சோழன்மாளிகை சரக வருவாய் ஆய்வாளர் சிவானந்தம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் .க.சுரேஷ் மாவட்ட பொருளாளர் வி.தியாகராஜன் கும்பகோணம் கோட்ட பொறுப்பாளர் சு.நீலகண்டன் கும்பகோணம் வட்ட தலைவர் உ.சுரேந்திர குமார் பாபநாசம் வட்ட தலைவர் .சி.ராஜ்குமார் கும்பகோணம் வட்ட செயலாளர் .ஆர்.தியாகராஜன் கும்பகோணம் வட்ட பொருளாளர் ர.ஜோதிநாயகம் மற்றும் உறுப்பினர்கள் அருண்குமார், ஆர்த்தி, ரவீந்திரன், கார்த்திக் குமார், பாலமுருகன், ராஜராஜன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment