இது தொடர்பாக காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே .ஆர்.ரவிச்சந்தர் வெளியிட்டுள்ள மனுவில், "கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை எப்பாடுபட்டாவது கட்டியே தீர வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருக்கிறார். மேகதாது அணை தொடர்பான பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதற்கு எதிரான கர்நாடக அரசின் நிலைப்பாடு தஞ்சை காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் .
இந்நிலையில், கர்நாடக அரசுடன் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக வெளியான செய்தி ஏற்கத்தக்கது அல்ல. இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே ஆணையம் அமைத்த பிறகு காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்த இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே கூட்டணி என்ற பெயரில் அண்டை மாநில உறவுகளை தமிழக அரசு சமரசம் செய்ய முயன்றால் விவசாயிகளை அனுமதிக்க மாட்டோம். தேவைப்பட்டால், காவிரியில் மேகதாது அணையை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்து சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயத் தொழிலை அழிவில் இருந்து காப்பாற்ற எனது கோரிக்கையை முதலமைச்சருக்கு அனுப்ப கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment