தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ஜெயமங்கள காளியம்மன் ஆலய வருடாந்திர வசந்த விழா திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு, குடமுருட்டி ஆற்று படித்துறையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திருப்பாலைத்துறை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment