"பாச்சூர் ஊராட்சியில் உள்ள 120 ஏக்கருக்கும் மேல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பொன்னி நெல் உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன. . இந்நிலையில் 2 நாள்களாக பெய்த மழையின் காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் சாய்ந்து விட்டன. மேலும் சில இடங்களில் நெல்கள் முளைத்து விடும் சூழ்நிலையில் உள்ளது. மேலும்மழை நீடிக்கும் வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதால், நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நெல் பயிரிட ஏற்படும் செலவு அதிகரித்தும், விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ள நிலையில் விளைந்த பயிர்கள் சேதம் அடைந்துவிட்டதால் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதுபோல் அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாச்சூர் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் மேலும் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பயிர் காப்பீடு இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே அடுத்த கட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆகவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 42 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரின் தலைமை விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment