முன்னதாக மன்ற இணைச் செயலாளர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்ற தலைவர் பத்மநாபன், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ராஜேந்திரன், முன்னிலை வகித்தனர். விவேகானந்தா தொண்டு நிறுவன செயலாளர் தங்க.கண்ணதாசன், முனைவர் பாஸ்கர், பாவை பைந்தமிழ் பேரவை செயலாளர் கமலஹாசன், ஆசிரியர் பொன்னேசுரேஷ், உ வே சா மகளிர் பேரவை தலைவர் சுதா, மகளிர் குழு தலைவி புஷ்பா தேசிங்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கலியபெருமாள் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
கூட்டத்தில் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழ் தாத்தா உவேசா சாமிநாதய்யர் என்று பெயர் சூட்ட வேண்டும், தமிழ் தாத்தா பிறந்த ஊரான உத்தமதானபுரத்தில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயற்குழு உறுப்பினர் அசரப்அலி நன்றி கூறினார்.


No comments:
Post a Comment