இதில், சர்வதேச மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாஜக எம்.பி.யும், அகில இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. டெல்லி காவல்துறையின் அராஜக நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
மக்கள் கலை இலக்கிய கழக மாநில இணை பொதுச்செயலா் ராவணன், ஆதித்தமிழா் கட்சி மாவட்டச் செயலா் ரங்கராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க நிா்வாகி களப்பிரான், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மாணவா் சங்க மாநிலத் தலைவா் ஜி. அரவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்."
No comments:
Post a Comment