கும்பகோணம் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த13 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாநகராட்சியின் முறையான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் குழாய்கள் உடைந்து நகர் முழுவதும் கழிவுநீர் வெளியேறி வருகிறது.
நகரின் ஒட்டுமொத்த கழிப்பறை நீர் பல்வேறு குளங்களிலும் காவிரி ஆற்றிலும் வடிய விடுவதுடன், மழைநீர் வடிகால்முழுவதும் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான மடத்துதெரு, சங்கர மடம், கல்யாணராமன் தெரு,மேட்டு தெரு, சோலையப்பன் தெரு, ராமசாமி கோயில், சாரங்கபாணி தெற்கு வீதி, காந்தியடிகள் சாலை, நாகேஸ்வரன் தெற்கு வீதி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்கள், சந்துகள் போன்றவற்றில் பாதாள சாக்கடை கழிவு நீர் தொட்டி நிரம்பி கொப்பளித்து சாலையில் ஓடுகிறது. பொதுமக்கள் அதனை மிதித்து செல்லும் நிலையில் உள்ளனர்.
குறிப்பாக மந்திரி சந்து பகுதியில்" வசிக்கும் ஜெயராஜ் கூறியதாவது: கடந்த பல மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் முழுவதும் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக நூறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். "புகார் எழும்போதெல்லாம் வடிகால் அடைக்கும் கழிவுகளை அதிகாரிகள் அகற்றுகிறார்கள், ஆனால் ஓரிரு நாட்களில் சாக்கடை நீர் நிரம்பி வழிகிறது," என்று அவர் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது தொடர்கதையாகி வருவதாகவும், ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிக நடவடிக்கை மட்டுமே எடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சியிடம் பலமுறை சொல்லியும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. உடனடியாக கழிவுநீரை அகற்றியும் மேலும் கழிப்பறைநீர் வெளியேறாமல் தடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு நோய்கள் பரவும் நிலையும் உள்ளது. இதே போல் பிக் பஜார், ஜீவப்பன் தெரு,வி.ஏ.ஓ காம்ப்ளக்ஸ், அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் கூறுகையில், கடந்த பல நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை தொட்டி மூடியிலிருந்து கழிவு நீர் நிரம்பி கொப்பளித்து வெளியே சாலையில் ஓடுகிறது. இந்த சாலையில் செல்லும் அனைவரும் இதனை மிதித்து தான் சொல்லவேண்டியுள்ளது.
இதனால் கடையில் உட்கார முடியவில்லை. அந்தளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் நலன் கருதிமேயர், துணை மேயர், ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment