அதன் பிறகு அவர் கூறியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக சுற்றுலாத்துறை தமிழ்நாடு அரசு இணைந்து நடத்திய பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் 3 ஆண்டுகளாக தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மாவட்ட தலைநகர் தஞ்சாவூர் மற்றும் கோட்ட தலைநகர் தஞ்சாவூர்,கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் அனைத்து பேரூராட்சி ஊராட்சிகளிலும் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி எங்கள் சோழ கலை மன்றம் சிறப்பாக நடத்தப்பட்டு நல்ல பெயரைப் பெற்றுள்ளது.
எனவே, தமிழக அரசின் அனைத்து துறைகளின் சார்பில் அரசு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை எங்களுக்கு வழங்கிட மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறேன், அதேபோல் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசியக்கொடி ஏற்றி ராணுவத்தினர் மாளிகை மைதானத்தில் எங்கள் அமைப்பின் சார்பில் ஆடல் வல்லான், நாட்டியப்பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
எதிர்வரும் சுதந்திர தின நிகழ்ச்சியின் போது எமக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்
No comments:
Post a Comment