தஞ்சாவூர் செயின்ட் மேரிஸ் நர்சரி பிரைமரி பள்ளி தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி ஆகியோர் தலைமை வாங்கினார், லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் அக்ரோ சிட்டி சார்பாக சோழ மண்டல நாயகன் ஜெசி.அரிமா.தூதர்.டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஏகம் அறக்கட்டளை வி.இன்பதுரை தஞ்சை நகர மனவளக்கலை மன்ற அறக்கட்டளை குழுவினர் ஆகியோர் இணைந்து யோகா பயிற்சியை வழங்கினார்கள், அப்பொழுது யோகா கற்று கொண்டால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழலாம், உடலும், மனமும் லேசாகும். வீட்டிலேயே செய்யக்கூடிய இலகுவான பயிற்சியாக யோகாசனம் உள்ளது, வியர்த்து கொட்டுதல், மனநிலையில் திடீர் மாற்றம், கோபம், எரிச்சல், உடல் சூடாகுதல் போன்ற பிரச்னைகளை தடுப்பதற்கும் சரிசெய்வதற்கும் யோகா நல்லது உடல் எடை அதிகரிக்காமல் வீட்டிலேயே எளிமையாக யோகா பயிற்சியில் ஈடுபடலாம். இதனால் ரத்தஓட்டம் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்கள் வராமல் தற்காத்து கொள்ள முடியும்.
மன இறுக்கத்தை குறைத்து நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து வலி, மாத்திரை இல்லாமல் வாழ யோகா பயிறசி அவசியம் எந்த வயதிலும் தோலை பளபளப்பாக்கும். இளமையான தோற்றத்துடன் இருப்பதற்கு யோகா உதவும் என்று எடுத்துக் கூறி ஒவ்வொரு ஆசனங்களையும் செய்து காட்டி மாணவர்கள் பின்பற்ற யோகா பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். முன்னதாக நிகழ்ச்சியில் சோழ மண்டல நாயகன் ஜெசி.அரிமா.தூதர்.டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் யோகா பயிற்சி செய்யும் மாணவ மாணவிகளுக்கு துண்டு, பேனா வழங்கினார்.
No comments:
Post a Comment