குறுவை தொகுப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஏ. கே .ஆர் ரவிச்சந்தர் வலியுறுத்தல். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 21 June 2023

குறுவை தொகுப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஏ. கே .ஆர் ரவிச்சந்தர் வலியுறுத்தல்.

.com/img/a/

IMG_20230622_101022_199

வேளாண்மை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குறுவை தொகுப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என "தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர்  வலியுறுத்தினார்.

கோட்டாட்சியா் (பொ) கோ. பழனிவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே.ஆர் ரவிச்சந்தர் பேசியதாவது: கடந்த ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்தில் டோக்கன் வழங்குவதற்கு 2 மாதங்களும், உரம் வழங்குவதற்கு 3 மாதங்களும் தாமதமாகின. இதுபோல, நிகழாண்டு கடைப்பிடிக்காமல், விவசாயிகளுக்கு விரைவாக குறுவை தொகுப்புத் திட்டத்தை வழங்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

IMG_20230622_101021_862

திருவையாறு ஒன்றியம் பூதலூர் பகுதிகளில் மேம்பட்ட குறுவை சாகுபடி பயிரிட்டு. சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.குறுவை இன்சூரன்ஸ் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு குறுவை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அக்ரோ இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமியம் செலுத்தியும் கிராம வாரியாக சேத பட்டியல் வெளியிடப்படவில்லை காப்பீட்டு இழப்பு தொகை வழங்கப்படவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தனியாக 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது காவிரியில் 3,152 கன அடியும், வெண்ணாற்றில் 3,153 கன அடியும், கல்லணை கால்வாயில் 1,011 கன அடியும் திறந்து விடப்படுகிறது. 


எனவே காவிரியில் 7000 கனஅடி, 8000 கனஅடி திறந்தால் மட்டுமே விவசாயிகள் குறுவை நடவு பணியை மேற்கொள்ள முடியும், பயிர்கள் நடவு செய்த பின் நீர்மட்டத்தை குறைக்க முடியும்,  குடமுறுட்டி ஆற்றில் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை உடனே திறக்க வேண்டுகிறேன்.


ஆறுகள், கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் தாமதமாக துவங்கி, தண்ணீர் வந்த பின், பெயரளவுக்கு அதிகளவில் குளறுபடிகள் நடக்கிறது. பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், முழுமையடையாத பணிக்கு பணம் செலுத்தக்கூடாது. 



மேலும், நீர்வள ஆதார பொறியாளர்கள் முடிக்கப்பட்ட பணிகளை மட்டும் அளவீடு செய்து அதற்கான தொகையை வழங்க வேண்டும். பூதலூர் ஒன்றியம், கடம்பங்குடியில் கல்லணை கால்வாயில் சிமென்ட் அமைக்கும் பணி, தண்ணீர் வந்த பின் மதகுகள் அமைக்கும் பணி விதிமீறி நடப்பதாகவும், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad