இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் வ.ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பா.பாலசுந்தரம் விளக்க உரையாற்றினார். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உரித்த தேங்காய் ஒரு கிலோ 60 ரூபாய். கொப்பரை ஒரு கிலோ ரூ 200 என மத்திய மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்து தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ 3000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் காவல் நிலையங்களில் பிடித்து வைத்துள்ள விவசாயிகளின் மாட்டு வண்டிகளை எந்த நிபந்தனைகளும் இன்றி உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கூட்டத்தில் பன்னீர்செல்வம், முருகேசன், தங்கராஜ், தேசகாவலன், ரவி, கருணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
- செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment