ஆந்திரா காளாஸ்திரி கோயிலுக்கு இணையான கும்பகோணம் பிரசித்தி பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அருகில் உள்ள காமாட்சி ஜோசியர் தெருவில் இக்கோயிலுக்கான மற்றொரு வாயில் உள்ளது. அந்த வாயிலில் சித்தி விநாயகர் கோயிலைக் கடந்து கோயிலின் உள்பகுதிக்கு வலப்புறம் வழியாக வருவதற்கு பாதை உள்ளது அம்பாள் சன்னதி பாதையில் மனித கழிவு நீர், மலம், குப்பை சுகாதார சீர்கேடு அபாயம். உள்ளது.
மேலும், கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் புலம்புகின்றனர்.
திதி கொடுப்பதால் அம்பாள் சன்னதியில் குப்பைகள் அதிகம் வந்து தேங்குகிறது. காலையில், குப்பையை அகற்றும் துாய்மை பணியாளர்கள், கோவிலை ஒட்டிய பகுதியில் குப்பையை அகற்றுவது இல்லை.", நோய்த் தொற்று ஏற்படும் முன் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment