விவசாயிகள் ஆய்வுக் கூட்டத்தில் காவேரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே .ஆர்.ரவிச்சந்தர் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக காப்பீட்டு இழப்பீடு தொகுதி விவசாயிகளுக்கு வராததால் அறுவடை முடிந்த ஒரு மாதத்திற்குள் காப்பீட்டு இழப்பீடு கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
குறுவை அறுவடை பணிகள் பெரும்பாலும் மழைக்காலங்களில் நடப்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரம் மற்றும் வறட்சியால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மத்திய அரசிடம் பேசி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 21 புள்ளிகள் என நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
விவசாயிகளுக்கு விளைவிக்கும் நெல்லுக்கு எப்போதும் உரிய விலை கிடைப்பதில்லை. ஆனால், அரிசிக்கு இப்போது சிப்பத்துக்கு ரூ.200-ரூ.300 வரை கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது. அரிசி விலை உயர்கிறதே தவிர, விவசாயிகளுக்கு விலை கிடைப்ப தில்லை. மத்திய அரசும், மாநில அரசும் கிலோவுக்கு ரூ. 1 வீதம் மட்டுமே விலை உயர்த்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இப்போது, கிலோவுக்கு ரூ.1.43 வீதம் உயர்த் தப்பட்டிருந்தாலும், இடுபொருள்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.எனவே, தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிபடி குவிண்டாலுக்கு ரூ 2500 அறிவிக்க கோரி வலியுறுத்தினார்
No comments:
Post a Comment