தஞ்சாவூர் மாவட்ட ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாநிலத் துணைச் செயலாளர் கு. சோழன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்பி நாத்திகன் முன்னாள் மாவட்ட செயலாளர் இரா மாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மாவட்ட மாநகர நகர ஒன்றிய பேரூராட்சிகளில் கிளை அமைத்தல் ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்தல் ஆதித்தமிழர் அரிவாயுதம் மாத இதழ் தவறாமல் வாங்கி அனைவருக்கும் கொண்டு சேர்த்தல் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பலகை கொடிக்கம்பங்கள் ஏட்டுதல் விழா நடத்துதல் மதுரையில் நடைபெற இருக்கின்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு திரளான உறுப்பினர்கள் கலந்து கொள்ளுதல் போன்றவைகள் நிறைவேற்றப்பட்டன.மேலும் 40 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து தலைமைக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment