மரங்களை வேரோடு அழிப்பு: தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 9 May 2023

மரங்களை வேரோடு அழிப்பு: தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு


திருப்புறம்பியம் கிரமத்தில் புஞ்சை நிலங்கள் அபகரிப்பு; மரங்களை வேரோடு அழிப்பு: தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்  மனு



தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் வட்டம்  பகுதியில் உள்ள திருப்புறம்பியம்  கிராமத்தில் வசித்து வரும் வித்தியாசங்கர் சொந்தமான புஞ்சை நிலத்தை உள்ள மரங்களை வேரோடு அழித்துவிட்டும், ஒற்றையடி
பாதையை அபகரித்துவிட்டதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். 

இதில் எங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் புஞ்சை நிலத்தில் உள்ள ஆறு சென்ட்டில் தேக்கு மரங்களும் தென்னை மரங்களும் பயிர் செய்து மீத இடங்களை நெல் சாகுபடி செய்து வருகிறேன்.இதற்கான நீர்ப்பாசன வசதிக்காக போர்வெல்  அமைந்திருக்கிறேன்.புஞ்சை நிலத்தில் இரண்டு அடி அளவில் நடைப்பதற்காக விட்டிருந்தேன் நான் பாதைக்காக விடப்பட்ட இரண்டு அடி ஸ்தலத்திற்கு எதிர்ப்பக்கம் (தெற்கு பக்கம் )கிராம சமுதாய புஞ்சை நிலம் இருக்கிறது. அதன் சர்வே எண்174/1காலமாக எப்படி ஒற்றையடி பாதையாக  பயன்படுத்தி வந்தோம். இந்த  கிராமத்தை சேர்ந்த எம்.ஏ.பாண்டியன் என்பவர் அரசு அனுமதி பெறாமல் செங்கல் காள்வாய் அமைத்து அதற்கு வசதியாக வாகனங்கள் செல்ல டிராக்டர் லாரி எனது புஞ்சை நிலத்தின் இரண்டு அடி பாதையினையை ஆக்கிரமிப்பு
செய்து உள்ளார்.  அவருக்கு எதிராக கும்பகோணம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண்96/2023யினை தொடரப்பட்டது.

வழக்கு போட்ட ஆத்திரத்தினால் ஏம்.ஏ.பாண்டியன் அவரது ,ஆதரவாளரான அழகு த.சின்னையன் ஏப்ரல் 8-ந்தேதி இரவு 7:30 மணியளவில் சிலர் ரவுடிளுடன் வந்து என்  நிலத்தை அத்துமீறி நுழைந்து இரண்டு ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் எனக்கு சொந்தமான  8 தேக்கு மரங்களையு ம், தென்னை மரங்களையும் கீழே சாய்ந்து விட்டனர்.தொடர்ந்து ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்திஉள்ளனர்.இதை குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் எனது தாயார் ப. ருக்மணி புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

தொடர்ந்து ஏப்ரல் 13 -தேதி அன்று தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம்  புகார் மனு கொடுக்கப்பட்டது. களவு போன தேக்கு மரங்களின் மதிப்பு மூன்று லட்சம் ஆகும்.
ஏப்ரல் 28ஆம் தேதி அன்று தஞ்சை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 100 பக்கங்கள் கொண்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கொடுத்துள்ளேன்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த புகார் மனுவை பரிசீலனை செய்து ஏம்.ஏ பாண்டியன், அழகு த. சின்னையன்ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad