இந்த இணைப்பு விழா நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் அருகில் உள்ள அம்பேத்கார் திருவுருவச் சிலை முன்பு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் சங்கர் என்கிற ஜெய்சங்கர் முன்னிலையிலும், வயலூர் பாரத் மற்றும் ஜான் ஆகியோர்களின் தலைமையிலும் கட்சியில் இணைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் நில உரிமை மீட்பு மாநில பொதுச் செயலாளர் வீரன்.வெற்றிவேந்தன், சமூக நல்லிணக்க பேரவை மாநில துணைச் செயலாளர் சிவா தமிழ் நிதி, மாநகர செயலாளர் தமிழ் முதல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் இடிமுரசு இலக்குணன், ஒன்றிய செயலாளர்கள் வினோத் ராஜா, குருமாறன், சக்திவேல், சதீஷ், முருகையன், ராஜகோபால், கர்ணன், தெய்வ கன்னி தெய்வ கன்னி, தஞ்சை ரமேஷ், பழனிவேல், ராஜமாணிக்கம், குமார், ஜோசப் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் மற்றும் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனின் கொள்கை கோட்பாடுகளில் ஈர்க்கப்பட்டு, பல்வேறு கட்சிகளில் இருந்தும், சமூக அமைப்புகளில் இருந்தும் மற்றும் வேறு சமூகத்தில் இருந்தும் ஏராளமானோர் வி.சி.க.வில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு தொடர்ச்சியாக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் கள்ளர் ஆகிய சமூகத்திலிருந்து இளைஞர்கள், விவசாயிகள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் இன்று ( நேற்று) வி.சி.க்காவில் இணைந்துள்ளனர். இவர்களை நாங்கள் வரவேற்று மகிழ்கிறோம். அரசியல் தளம், பண்பாட்டு, பொருளாதாரப் பிரச்சினைகளில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு ஒரு வழிகாட்டியாக தலைவர் தொல். திருமாவளவன் இருந்து வருகிறார்.
இந்த காலகட்டத்தில் இவர் போன்ற அரசியல் ஆளுமை மிக்க தலைவர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. இதனால் மாற்றுக் கட்சி மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சிக்கு வந்த வண்ணம் உள்ளனர். டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசும் உறுதியாக நிற்க வேண்டும். இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
மீறினால் மத்திய அரசை எதிர்த்து தலைவர் தொல். திருமாவளவன் அறிவுறுத்தலின் பேரில் களத்தில் நின்று விடுதலை சிறுத்தைகள் போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment