தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ பி காலனி பகுதியில் 3 இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சிக்கு பாஜக ஓபிசி அணி மாவட்ட செயலாளர் ஆர். ஆனந்தன் தலைமை வகித்தார். முதலாவதாக இபி காலனி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கோடைக் கால தண்ணீர் பந்தலை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ் திறந்து வைத்தார். பால் பண்ணை அருகில் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் அமைக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் பந்தலை கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க. சக்தி வடிவேலு திறந்து வைத்தார்.

ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள கோடைக்கால தண்ணீர் பந்தலை ஓபிசி அணி மாவட்ட செயலாளர் ஆர். ஆனந்தன் திறந்து வைத்தார். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பால செல்வம், மேற்கு ஒன்றிய தலைவர் மிலிட்டரி காமராஜ், கிழக்கு மண்டல துணைத் தலைவர் செல்வி பிரபாகரன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கனிஷ்கா ஹரிணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரீத்தா, கிழக்கு ஒன்றிய செயலாளர் சாந்தி, இ.பி.காலனி பொறுப்பாளர் செல்லதுரை, காளிதாஸ், பிரவீன், பிரபு, விமல், கருணாகரன், மணி மற்றும் ஓ.பி.சி. அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment