
பேராலய முகப்பு மேடை வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய பாதிரியார்கள் முகப்பு மேடைக்கு எடுத்து சென்றார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனைகள் தொடங்கின. இதில் பல்லாயிரகணக்கானோர் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இரவு 12 மணிஅளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்திரு எல்.சகாயராஜ் தலைமையில் சிறப்புதிருப்பலி நடைபெற்றது. இதில் மறைவட்ட அதிபர் பேரருட்திரு.ஏ.ஏம்.என் பிரபாகர், ஆயர் செயலாளர் அருட்திரு. ஆண்ட்ரு , உதவிப் பங்கு தந்தை பிரவின் திருத்தொண்டர் அரவிந்த் உள்ளிட்ட அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment