தமிழ் பல்கலைக்கழகத்தில் பழங்குடி மக்கள் ஆய்வு மையத்தில் நூல் வெளியீட்டு மற்றும் தொடக்கவிழா.
தமிழ்ப் பல்கலைக்கழகம் பழங்குடி மக்கள் ஆய்வு மையம் நடத்தும் தொல் குடி சமூகத்தின் மொழி மற்றும் பண்பாடு ஒருநாள் பன்னாட்டு கருத்தரங்கம் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் வி திருவள்ளுவன் தலைமை தாங்கி "இருளர் பழங்குடி மக்களின் சமூக ,அமைப்பு ", " நா. வானமாமலையின் ஆராய்ச்சி இதழ் வரலாற்றுப் பார்வை "ஆகிய இரு நூல்கள் வெளியிட்டு உரையாற்றினார்.பதிவாளர் (பொ)பேராசிரியர் சி.தியாகராஜன் முன்னிலை வகித்தார். பழங்குடி மக்கள் ஆய்வு மையம் , துறைத்தலைவர் முதுமுனைவர் எம் .ஏ .சிவராமன் நோக்கவுரையாற்றினார் முன்னதாக பழங்குடி மக்கள் ஆய்வு மையம், முனைவர் பட்ட ஆய்வாளர் கா. சீனிவாசன் வரவேற்று பேசினார்.
'தொடர்ந்து இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,, பேராசிரியர் மற்றும் துணைத் ,தலைவர் ,மொழிப்புலத் தலைவர்பேராசிரியர் ச .கவிதா வாழ்த்துரை ஆற்றினார்.மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,மொழியியல்(ம்)தகவல் தொடர்பியல் புலம், மொழியியல் துறை, புலத்தலைவர்,முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் வி.ரேணுகாதேவி நூல்களைப் பெற்று வாழ்த்துரையாற்றினார்.
சிதம்பரம் , அண்ணாமலை பல்கலைக்கழகம் மொழியில் உயராய்வு மையம், உதவிப் பேராசிரியர் தலைவர் முனைவர் பூ. விஜயா " நீலமலையின் பூர்வீக குடிமகள் "என்ற முதல் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
கோயமுத்தூர்,கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,முதுகலை தமிழ் உயராய்வுத்துறை,உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ச.அரிச்சந்திரன் "முள்ளுக் குறும்பா மற்றும் பணியா பழங்குடி-ஓர் ஒய்யாய்வு" என்ற இரண்டாவது தலைப்பில் சொற்பொழிவாற்றினார்
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரச கலை கல்லூரி,வெள்ளாட்டு துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜெ .ஆர் சிவராமகிருஷ்ணன் "கோத்தர் பழங்குடிமகளின் வரசாவுத் திருவிழா"என்ற மூன்றாவது தலைப்பில் சொற்பொழிவாற்றினார.
மலேசியா ,பெராக் மாநிலம், சோல்டன் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகம்,மொழி மற்றும் தொடர்பு பீடம், மூத்த விரிவுரையாளர் டாக்டர் .எஸ்.பிராங்கிளின் தம்பி ஜோஸ் "பண்டைய அமெரிக்க நாட்டின் தொல்குடிமகள்"என்ற நான்காவது தலைப்பில் சொற்பொழிவாற்றினார.
விழாவில் முனைவர் பட்ட ஆய்வாளர் ஞா.செளபர்ணிகா, பழங்குடி மக்கள் ஆய்வு மையம், முதுகலை பட்ட மாணவர் ரா.இளவரசன் ஆகியோர் "ஒரு ஆய்வு மூப்பன்: ஒரு கண்ணோட்டம்" என்ற தலைப்பில் இணைப்புரையாற்றினர். இறுதியில் பழங்குடி மக்கள் ஆய்வு மையம் முதுகலை பட்ட மாணவர் தா.பாலாஜி நன்றி கூறினார்

No comments:
Post a Comment