தஞ்சையில் கவிஞர் சுசித்ரா மாறனின் கவிதை நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர் கவிஞர் சுசித்ரா மாறன் எழுதிய ஆலயங்களின் சிம்ஃபொனி, ஃபெரமோன் குடுவை கவிதை நூல்கள் அறிமுக விழா பெசண்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பாரத் கல்வி குழுமத்தின் செயலர் புனிதாகனேசன் தலைமை தாங்கினார். சதயவிழா குழு தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முனைவர் தமிழ் மணவாளன் ஆகியோர் அறிமுகவுரையாற்றினார்.
கிருஷ்னாநந்தம், பேராசிரியர் முத்துகுமார், தமிழாசிரியர் கலியமூர்த்தி, கவிஞர்கள் சுபாஷ்சந்திரபோஸ், சசிகுமார், மரு. நடராஜன், பெருமாள், ப்ரியா வெங்கடேசன், சுகுமாரன், ஆண்டன்பெனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் நிகழ்ச்சித் நிறைவாக கவிஞர் சுசித்ரா மாறன் ஏற்ப்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர் மூசா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் இன் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

No comments:
Post a Comment