பேராவூரணி அருகே பகுதி நேர அங்காடி அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி பஞ்சநதிபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பகுதிநேர அங்காடியை திறந்து வைத்து தமிழ்க அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பேசினார். முதல் விற்பனையை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் வை. முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் உ.துரைமாணிக்கம், குழ.செ.அருள்நம்பி, திமுக ஒன்றிய செயலாளர் க.அன்பழகன்,பொது விநியோக திட்ட ஆய்வாளர் பாலச்சந்தர், வட்ட வழங்கல் முதுநிலை ஆய்வாளர் தில்லைராஜன் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment