தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த : தமிழக தமிழாசிரியர் கழகம் கோரிக்கை - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 18 April 2023

தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த : தமிழக தமிழாசிரியர் கழகம் கோரிக்கை


தஞ்சையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த : தமிழக தமிழாசிரியர் கழகம் கோரிக்கை


தஞ்சாவூர் தமிழக தமிழாசிரியர் கழக மாநிலச் செயற்குழு  மற்றும் பொதுக்குழு கூட்டம் பெசண்ட் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் புல்வர் கு. சரவணன்  தலைமையில் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர் செயலாளர் ஜான் பீட்டர்  வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர்  (பொறு) புல்வர் க.நாகேந்திரன் மாநில பொருளாளர் முனைவர் இரா கோவிந்தன்,சிறப்புத் தலைவர் புல்வர் ஆ.ஆறுமுகம்,  இராசா, ஆனந்தன் மற்றும் அமைப்புச் செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த செயற் குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் விவரம் வருமாறு:

புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் 

மத்திய அரசு வழங்குவது போல் அகவிலைப்படியை ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.

ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணப் பலன்பெறும் முறையை உடன் அறிவிக்க வேண்டும். 

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். 

ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வினை ஒளிவு மறைவின்றி உடன் மே திங்களில் நடத்துதல் வேண்டும். 


2010ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு முடிய பணியில் சேர்ந்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத சுமார் 1500 பேருக்கு தகுதித் தேர்விலிருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும்
 

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதைத் தவிர்த்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற முறையைக் கொண்டுவந்து காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். 

ஊதிய முரண்பாடுகளை உடன் நீக்க வேண்டும்.

உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் 
மாணவர் நலன் கருதி Emis-ஐ ஆசிரியர்கள் பொறுப்பில் இருப்பதை தவிர்த்து நலத் திட்டங்களுக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும்.
 காலிப் பணியிடங்களை உடன் நிரப்புதல் வேண்டும். 


அரசாணை 266 ஐ இரத்து செய்து தமிழ்ப் பாடத்தை முதன்மைப் பாடமாக வைத்தல் வேண்டும். 
அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வி கட்டாயம் இருத்தல் வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில்
தஞ்சை மாவட்டச் செயலாளர்  குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad