பேராவூரணி தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகள். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 22 April 2023

பேராவூரணி தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகள்.


பேராவூரணி தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகள்.



தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் பொதுவாக நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டிருக்கிறது எனவே தரமான சிகிச்சை வழங்கிடவும் சாலை விபத்துக்கள் அதிக நடப்பதால் விபத்து சிகிச்சை மையம் ஒன்று ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள் மற்றும் போதுமான செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், தேவையான நவீன உபகரணங்கள் வழங்கி பேராவூரணி அரசு மருத்துவமனை தர உயர்த்தி மேம்படுத்தி தரவேண்டும்.


தேசிய தரச் சான்றிதழ் பெற்ற செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம்,செவிலியர்குடியிருப்பு , பின்னவாசல், காலகம் ஆகிய இடங்களில் செவிலியர் குடியிருப்பும், குறிச்சி, இடையாத்தி, துறவிக்காடு, பெரியநாயகிபுரம் ஆகிய பழுதடைந்துள்ள துணை சுகாதார நிலைய கட்டிடங்களை புதிய கட்டிடங்களாக மாற்றி தர வேண்டும்.


சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பெருமகளூர், அழகியநாயகிபுரம், ஊமத்தநாடு ஆகிய மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செவிலியர் குடியிருப்பு வசதியும், பெருமகளூர் ஊமத்த நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மகப்பேறு பிரிவு புதிய கட்டிடங்கள் கட்டித் தரவும், பெருமகளூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆழ்குழாய் கிணறு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.


திருவோணம் ஒன்றியத்தில் நெய்வேலி, அதம்பை மற்றும் வெங்கரை ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் குடியிருப்பும், வெண்கரை சோதனை நிலையத்திற்கு ஆழ்குழாய் கிணறு வசதி செய்து தர வேண்டும்.


புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை மல்லிப்பட்டினம் , ஒட்டங்காடு, செந்தலை வயல், ரெட்டவயல், மணக்காடு ஆகிய இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி தர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரத்த சேமிப்பு வங்கியும், அலுவலக பணிக்கு நான்கு சக்கர வாகனமும், பெருமகளூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய சித்த மருத்துவ பிரிவு தொடங்க வேண்டும் 


திருவோணம்ஒன்றியம் ஊரணிபுரத்தில் ஓர் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும்.


சரபேந்திரராஜபட்டினம், பாப்பாங்கண்ணிஆற்றின் குறுக்கே தடுப்பணை, அக்கினி ஆற்றின் குறுக்கே குறிஞ்சி கிராமத்தில் தடுப்பணை, அக்னிஆற்றின் குறுக்கே ஈச்சன்விடுதி கிராமத்தில் தடுப்பணை, அம்புலி ஆற்றின் குறுக்கே செங்கமங்கலம் கொரட்டூர் தடுப்பணை மருதங்குடி ஆற்றின் குறுக்கே ரெட்டவயல் கிராமத்தில் தடுப்பணை கட்டி தர வேண்டும்.


பேராவூரணியில் தற்போது உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்திடவும், வாரசந்தையை மேம்படுத்திடவும் வேண்டும்.


பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதிகளுக்கு மின்சாரம் குறைந்த மின்னழுத்தம் வருவதால் அதை சரி செய்யவும் ,ஒரத்தநாடு தொகுதியில் உள்ள நெம்மேலி, திப்பியக்குடி 230 கே வி துணை மின் நிலையத்திலிருந்து பேராவூரணி சேதுபாவாசத்திரம் 110 கேவி துணை மின் நிலையங்களுக்கு நேரடியாக மின்சாரம் வழங்கும் பணி 5 வருடங்களாக மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை விரைந்து முடிக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்.


பேராவூரணியில் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைத்திடவும் ,வாடகை கட்டிடத்தில் தற்போது இயங்கி வரும் உதவிசெயற் பொறியாளர், உதவி பொறியாளர் மின்சார வாரிய அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். மின் அலுவலக பயன்பாட்டிற்கு நான்கு சக்கர வாகன வசதி செய்து தர வேண்டும்.

தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்திட கூடுதலாக தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கிடவும், பேராவூரணி தொகுதி முழுவதும் தென்னை சாகுபடி பெரிதும் நம்பி இருப்பதால் இப்பகுதிக்கு அரசு கொப்பரை கொள்முதல் நிலையம் தனியாக ஒன்று அமைத்து தரவும் தேங்காய் மற்றும் அதன் உப பொருட்களை எப்போதுமே ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் தென்னை சார்ந்த ஓர் தொழிற்பேட்டை அமைத்திடவும் வேண்டும். தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து இருப்பதால் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மதிய உணவு ,காலை சிற்றுண்டி வகைகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துமாறும், அரசு நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்திடவேண்டும்.  விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை பாதுகாத்திட குளிரூட்டப்பட்ட தானிய சேமிப்பு கிட்டங்கி அமைத்து தர வேண்டும்.


திருச்சிற்றம்பலம் பெருமகளூர் ஆகிய ஊர்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகங்களை மக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேராவூரணியில் புதிதாக காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மகளிர் காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்துதர வேண்டும்.92 கிராமங்களை உள்ளடக்கிய பேராவூரணி காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து பெருமகளூர் தலைமை இடமாக கொண்டு ஓர் புதிய காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சட்டமன்றத்தில் கோரிக்கையாக வைத்தார்.


செய்தி: த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad