பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 21 April 2023

பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம்


பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் 



தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மரக்காவலசை ஊராட்சியில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை, கழுமங்குடா, காரங்குடா, கிளைகள் சார்பில், பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். வழக்கறிஞர் கருப்பையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



ஆர்ப்பாட்டத்தில், "கடற்கரை முகத்துவாரங்களை தூர்வாரி படகுகள் நிற்பதற்கு வசதி செய்து தர வேண்டும். கழுமங்கடா கருவாடு உலர்த்தும் தளத்தினை கருவாடு உலர்த்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசுக்கு சொந்தமான மீன் உலர்த்தும் களம் என பெயர் வைக்க வேண்டும். மின் வசதி இல்லாத மரக்காவலசை குடிசை வாழ் மக்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். குடிமனைப் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும். காரங்குடா கூட்டுறவு சங்கத்தில் பெண் மீனவர்களுக்கு கடன் வழங்கவும், பெண்களுக்கு பொது கழிப்பறை அமைத்து தரவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 




செய்தி: த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad