தஞ்சை புலவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமையில் டெல்லியில் கலை இலக்கிய விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 10 April 2023

தஞ்சை புலவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமையில் டெல்லியில் கலை இலக்கிய விழா.


டெல்லி கலை இலக்கிய பேரவை மற்றும் பன்னாட்டு தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பாக டெல்லியில் கலை இலக்கியப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கற்பகவினாயகம்  தலைமை தாங்கினார். டெல்லி காவல்துறை ஆணையர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். பட்டிமன்றம் கருத்தரங்கம் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கவியரங்கம் என நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

கவியரங்கத்தை தஞ்சை புலவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமை ஏற்று நடத்தினார். தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த முனைவர். அய்யாறு புகழேந்தி கவிஞர் அரவிந்தன் கவிஞர் ராச.பத்மநாபன் கவிஞர் சிவகுமார் கவிஞர்.விநாயகமூர்த்தி உட்பட அயல்நாடு  பிறமாநிலத்தவர்கள் என 10  கவிஞர்கள் கவிதைகள் பாடினர். விழாவில் தஞ்சைத்தமிழ்ப் பல்கலைக்கழக அயலகத்துறைத் தலைவர் பேராசிரியர் குறிஞ்சிவேந்தன் ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் சிலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 


உடையார் கோவில்குணா  விழாவில் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழ்ப்பேரவையின் செயலர் டெல்லி. குமார் பேரவைப் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செய்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad