தஞ்சையில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 20 April 2023

தஞ்சையில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு.

தஞ்சையில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு. 


தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் அமைந்துள்ள ராஜராஜ சோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு 2019- 20ஆம் ஆண்டு தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியின் மூலம் ரூ 30 லட்சம் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டது. 


அதன் மூலம்   சிறுதானியம் மதிப்பு கூட்டுதல் அலகு, அப்பளம் தயாரிக்கும் இயந்திரம், மசாலா அரவை இயந்திரம் மற்றும் எண்ணெய் பிழியும் இயந்திரங்கள் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் செயல்பாட்டினை செவ்வாய்க்கிழமை  அன்று உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் சென்னை, (IAMWARM) துணை இயக்குனர்
திருமதி மீனா குமரி, தஞ்சாவூர் வேளாண் வணிகம், துணை இயக்குனர்  திருமதி கோ வித்யா , உலக வங்கி வல்லுநர்கள், GT,MDPU ஆலோசகர்கள், வேளாண்மை அலுவலர் திருமதி தாரா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிங்காரவேல், ராஜ்குமார்,  கணேசன், கோவிந்தராஜன்   வளையாபதி ஆகியோர்கள் உடன் இருந்தனர்.


ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு ராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்  மணிமொழியான்  அப்பளம் தயாரித்தல் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டுதலை  செயல் விளக்கம் செய்து காட்டினர். நிறுவனத்தின் மகளிர் இயக்குனர் திருமதி திலகம் தான் நிறுவனத்தில் சேர்ந்த பின், தான் விளைவிக்கக் கூடிய வேளாண் விளைபொருட்களை  நல்ல விலை கொடுத்து நிறுவனமே கொள்முதல் செய்ததாக   கூறினார். இதன் மூலம் உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரம்   மற்றும் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். உலக வங்கி வல்லுனர்கள் நிறுவனத்தின் உறுப்பினர் திருமதி சசிகலா அவர்கள் மூலம் தயாரிக்கும் துவாரகா  சத்துமாவினை சந்தைப்படுத்துவதற்கு அறிவுரை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad