விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க சேதுபாவாசத்திர ஒன்றியப் பொறுப்பாளர் சின்னதம்பி ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கருப்பையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் எஸ்தர் ஜெயலீமா ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்து பேசினார்.

இதில், பேராவூரணி விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியத் தலைவர் பழனியப்பன், சேதுபாவாசத்திரம் அடைக்கலம், விவசாய தொழிலாளர் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தில் ரூபாய் 2.74 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலைக்கு வரும் நேரத்தை காலை 7 மணி என்பதை 9 மணி என மாற்றியமைக்க வேண்டும். தினச் சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும்.
வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பாக்கி வைக்கக் கூடாது. நூறுநாள் வேலையை நகரப் பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். குடியிருப்பு மனை இல்லாத ஏழைகளுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். கோவில், மடம், சர்ச், மசூதி இடங்களில் குடியிருப்பவர்களுக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும்.
சாலை ஓரம், ஆற்றங்கரை, குளக்கரை ஓரங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் நலவாரிய பயனாளிகளுக்கு 3 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள உதவித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
பழுதடைந்த தலித் மக்களின் தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக ரூபாய் 7 லட்சத்தில் புதிய வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:
Post a Comment