தஞ்சாவூர் உயிராற்றல் ஹோமியோ ரிசர்ச் மற்றும் அவர்னஸ் டிரஸ்ட் சார்பில் ஓமியோபதித் தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமென் 268வது பிறந்த நாள் விழா பெசண்ட் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது..
நிகழ்ச்சியல் உயிராற்றல் மருத்துவமனை டாக்டர் பா.மனோ பாலா தலைமை தாங்கினார்.உடலியக்கம் ஆசிரியர் குழு டாக்டர் மரு, வி எஸ். பீர் முகமது முன்னிலை வகித்தார்.முன்னதாக டாக்டர் மரு, கா.அரங்கராசன் வரவேற்றார்.
தொடர்ந்து டாக்டர் கி. தனபாலன் அவர்களுக்கு "டாக்டர் ஹானிமென் விருது வழங்கப்பட்டது.இவர் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பல போராட்டங்களை நடத்தி கல்லூரிக்கு சொந்த கட்டிடம் வர காரணமாக இருந்தவர்.கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தமிழ்நாட்டில் பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலவச மருத்துவ முகங்களை நடத்தி மருத்துவ சேவையும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.20 ஆண்டுகளுக்கு மேலாக இன்றுவரை மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடத்தி வருகின்றார்.இவர் செய்த தொண்டினை பாராட்டி பல விருதுகளை வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் சாத்தூர் இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில், சேர்மன் டாக்டர் எஸ் ,வெங்கடாச்சலம், லால்குடி டாக்டர் ஜே அருள்மொழி,தமிழ் பல்கலைக்கழகம் பேராசிரியர் தெ .,வெற்றிச் செல்வன்,திருச்சி டாக்டர் கே எஸ் பாலசுப்ரமணி, போளூர் நல்வாழ்வு கல்வி நிறுவனம் மருத்துவர் வெற்றி செல்வன்,தஞ்சாவூர் டாக்டர் பேர் பாலசுப்ரமணியன், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். நிறைவில் மலர் மருத்துவர் மரு, ப.பாஸ்கரன் நன்றி கூறினார்

No comments:
Post a Comment