ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் மாவட்ட துணைச் செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோவில் மனை நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய பகுதி குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும் எனவும், கடந்த ஆட்சியில் புகுத்தப்பட்ட 34 ஏ, பி, சி, டி, சட்ட பிரிவுகளை ரத்து செய்து கடந்த 2016 இல் நடைமுறையில் இருந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும், கோவில் உரிமை கோரும் கிராமநத்தம், இனாம் நிலம், குடிக்காணி போன்ற இடங்களின் உண்மை நிலையை உயர்மட்ட குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும், அத்தியாவசிய தேவைகளான மின்சாரம், குடிநீர், கழிவு நீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும், முன்னாள் முதல்வர் கலைஞர் அளித்த குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகார வழங்க வேண்டும் எனவும், பேராவூரணி வட்டம் ஆர்.கே, நகர் பகுதியில் கோவில் இடத்தில் இருட்டில் வசிக்கும் ஏழைகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கவும், நிபந்தனை இன்றி பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் எனவும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களை பொது நீதித்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கருணாமூர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சேதுபாவாசத்திரம் எஸ்தர்ஜெயலீமா,ஜெயராஜ், மூர்த்தி, நீலாவதி,மற்றும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.
- செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:
Post a Comment