கும்பகோணத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இயக்குனருக்கு விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் அனைத்து கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கும்பகோணத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இயக்குனர் ரவிவர்மனுக்கு, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் அனைத்து கட்சி சார்பில். பாராட்டு விழா ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. விழாவில் தமிழ் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் பிரபாகரன், கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ் பல்கலைக்கழக நல சங்கம் எஸ்சி எஸ்டி நிறுவனர் கஜேந்திரன், கரந்தை கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அரங்க சுப்பையா, எழுத்தாளர் பாலு, முதுநிலை மேலாளர்கள் செல்வராஜன், நாகராஜன், அரசு ஊழியர் அரசு பேரவை முன்னாள் மாநில தலைவர் அரசாங்கம், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர் முல்லைவளவன், நீல புலிகள் இயக்க தலைவர் வழக்கறிஞர் இளங்கோவன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் இயக்குனர் ரவிவர்மனுக்கு சந்தன மாலை, மற்றும் சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி கௌரவித்தனர், தொடர்ந்து நிர்வாகிகள் அவரை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment