தஞ்சாவூர் இருதய ஆண்டவர் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு 10-ம் ஆண்டு இலவச ரத்த தான முகாம்.
தஞ்சாவூர் திரு இருதய ஆண்டவர் பேராலயமும் மற்றும் இராசா மிராசு தார் மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு 10-ம் ஆண்டு இலவச ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு பங்குத்தந்தை அருட்திரு பிரபாகர் தலைமை வகித்தார். முகாமை உதவி பங்குத்தந்தை அருட்திரு பிரவின் தொடங்கி வைத்து முதலாவது ஆளாக தானாக முன்வந்து ரத்த தானம் செய்தார்.
இந்த முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இங்கு பெறப்பட்ட ரத்தம் மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment