அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியின் கலையரங்கத்தில் ஆண்டு விழா திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ்தலைமை தாங்கினார் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை தலைவர் பாலாஜி ஆண்டறிக்கை வாசிக்க, சிறப்பு விருந்தினரை முனைவர் முருகன் அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு மாணவரும் கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை எழுதி படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஆண்டு விழா போட்டிகளில் பங்கேற்று, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் இராம வேல்முருகன் வரவேற்றார் இறுதியில் உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞானராஜ் நன்றி கூறினார்

No comments:
Post a Comment