தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்த டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பு சார்பாக டெல்டா கூட்டமைப்பின் தலைவர் ச. முகமதுசுகைல், செயலாளர் செவன் லெவன் ப.உதயகுமார், பொருளாளர் இரா. ரகுராமன், கௌரவத் தலைவர் க.அசோகன், சட்ட ஆலோசகர் R. சரவணபாரதி ஆகியோர் தலைமையில் வணிகர்களின் பாதுகாப்பிற்காக கடைத்தெருவில் 12 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா அவர்கள் அறிவுறுத்தலின்படி டெல்டா கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஜமால் முகமது, பாரதி, பாலமுருகன், ஹாஜா மைதீன், சரவணன், செல்வசேகர், ஜாகிர்உசேன், கணேசன் மூர்த்தி, ரவிச்சந்திரன், செல்வகுமார், அக்பர்அலி, பிரபாகரன், அருண், கரிகாலன், குமார், கருணாகரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கே.எம்.கே. சந்திரசேகரன் , செய்தி தொடர்பாளர் லுக்மான் உமர் ஆகியோர் முன்னிலையில், திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் y. ஜாபர் சித்திக் அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார் அதைத்தொடர்ந்து அணைக்கரை அனைத்து வணிகர் நல சங்க பொறுப்பாளர்கள், தலைவர் வி வாசுதேவன், கௌரவத் தலைவர் ஜே பட்டாபிராமன், செயலாளர் பி ஜே கணேசன், பொருளாளர் எஸ் வைரவேல் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.


No comments:
Post a Comment