பாபநாசத்தில் அரசு மதுபான கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்கு வீதி மின் மயானம் அருகில் சாலியமங்கலம் சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான கடை மாற்றி அமைக்க படுவதாக தெரியவருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறனர்.
பாபநாசம் வடக்கு வீதி பகுதியில் அதிக அளவில் குடியிருப்புகள் மற்றும் வழிபாட்டு ஆலயங்கள் உள்ளதோடு அருகாமையில் பெண்கள் மேல்நிலை பள்ளி கட்டிடங்களும் செயல்பட்டு வருகிறது
இதனால் இப்பகுதியில் அரசு மதுபான கடை அமைத்தால் பெண்கள், பள்ளி செல்லும் மாணவியர்,ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படும். எனவே இங்கு அரசு மதுபான கடை அமைக் கூடாது. அப்படி அமைத்தால் மக்கள் ஒன்று திரண்டு சாலைமறியலில் ஈடுபடுவோம் என பாபநாசம் வடக்கு வீதி பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனர்
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் பாபநாசம் வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளனர்
No comments:
Post a Comment