தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், சேதுபாவாசத்திரம் தெற்கு, வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் பூக்கொல்லை கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மருங்கப்பள்ளம் ஆர்.கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராம்ஷா கண்டன உரையாற்றினார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை, கழனிவாசல் முருகன், திருச்சிற்றம்பலம் ஏ.சி.சி.மாரிமுத்து, பூவாணம் தனிக்கொடி, குருவிக்கரம்பை சிவப்பிரகாசம், தெற்கு வட்டார தலைவர் தூண்டி ஐயப்பன், முன்னாள் வட்டார தலைவர் பெருமகளூர் ரவிச்சந்திரன், கொரட்டூர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment