தஞ்சை புனித அடைக்கல மாதா தேவாலயத்தில் இலவச ரத்த தான முகாம்
தஞ்சை புனித அடைக்கல மாதா தேவாலயத்தில் குருத்தோலை பவனி முன்னிட்டு இலவச ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை நல்ல சமாரியர் இயக்கத்தினர் சார்பாக நடைபெற்ற இந்த முகாமை பங்குத்தந்தை அருட் திரு ஜெயராஜ் ஜெபத்துடன் தொடங்கி வைத்தார். காலை 9 மணி முதல் தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் ஆண்கள்,பெண்கள், என ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். இதில் நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர்.
இந்த முகாமில் பெறப்பட்ட ரத்தம் (குருதியானது) தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அடைக்கல மாதா பங்கில் உள்ள நல்ல சமாரியர் இயக்க உறுப்பினர்கள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்னை தெரசா நல வாழ்வு மையத்திலிருந்து ஊழியர்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவி புரிந்தனர்.
No comments:
Post a Comment