பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மொழிகள் துறையில் சிறப்புச் சொற்பொழிவு.
தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மொழிகள் துறையில் சிறப்புச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துறையின் தலைவர் முனைவர் வி.சரண்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.சத்தியா அவர்கள் "தன்னை அறிதல்" என்னும் பொருண்மையில் மாணவர்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
இந்நிகழ்வில் மொழிகள் துறையின் உதவிப் பேராசிரியர்களான முனைவர் ச.லெனின்குமார் வரவேற்றார் . முனைவர் து.உமாமகேஸ்வரி நன்றி கூறினார். புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment