2022 ன் மழை கால நிவாரணம் உடனடி வழங்க வேண்டும்: குலாலர் நலச்சங்கம் வலியுறுத்தல் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 14 March 2023

2022 ன் மழை கால நிவாரணம் உடனடி வழங்க வேண்டும்: குலாலர் நலச்சங்கம் வலியுறுத்தல்

2022 ன் மழை கால நிவாரணம் உடனடி வழங்க வேண்டும்: குலாலர் நலச்சங்கம் வலியுறுத்தல்


தஞ்சாவூர் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் திருச்சி  தேசிய தொழில்நுட்பக் கழகம் இணைந்து  நடத்தும் விழிப்புணர் கூட்டம்  பெசண்ட் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

மாநில நிறுவனர் வி தியாகராஜன், தொழிற்சங்க தலைவர் டி. கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்கி உரையாற்றினார். மாநில நிர்வாகி குருமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எம் சக்திவேல் ,மாவட்ட தலைவர்கள் கே. அப்பாவு கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏ செல்வராஜ் டி கருணாநிதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
முன்னதாக தேசிய தொழில்நுட்ப கழகம் இணை டீன் ஆர் ஆனந்த் வரவேற்றார். 


இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  இக்கூட்டத்தில், மண் பாண்டங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு நேரடியாக காண்பிக்கப்பட்டது.  இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.  அங்கு வந்த பொதுமக்களும், பார்வையாளர்களும் எத்தனை சிரமங்கள் என்பதை நன்கு உணர்ந்தனர்.  மண் பாண்டங்களை பயன்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர்.ஆனால் இதை நாம் மறந்துவிட்டு உடல் நலத்துக்கு தீமை விளைவிக்கும் பாத்திரங்களை உபயோகப்படுத்துகிறோம்.மண் பாண்டங்களை அனைவரும் உபயோகிப்போம் என பொதுமக்கள் கூறினர்.

 இதில் 2022 ன் மழை கால நிவாரணம்உடனடி வழங்க வேண்டும்.தமிழ்நாட்டிலுள்ள  மண் பாண்ட தொழிலாளர் களுக்கு. விடுபட்ட மழைக் கால நிவாரணம் அனைவருக்கும் வழங்க வேண்டும்.,  மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, 5% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,  

அகில இந்திய குலாலர் மகளிர் குழுவிற்கு. அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். மத்திய, மாநில, KYIG,TIC கதர்கிராம வாரிய மானியத் துடன் வழங்கப்படும்.
வங்கிக்கடனை, வங்கிகள் விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள்    நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment

Post Top Ad