இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 14 March 2023

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம்.


தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பேராவூரணி தொகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைப்பெற்றது. 



இக்கூட்டத்திற்கு எம்.மகேந்திரன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் என்.காளிதாஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னால் மாவட்டக் குழு உறுப்பினர் சி. ஜெயராஜ். ஏஐடியுசி மாவட்ட துனைத் தலைவர் கே.எஸ்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஊமத்த நாடு. மனக்காடு ஆகிய ஊர்களில் மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள அரசு உரிமை வழங்க வேண்டும். 



ஏற்கனவே மணல் அள்ளியதாக பேராவூரணி சேதுபாவாசத்திரம் அதிராம்பட்டினம் காவல் நிலையங்களில் பிடித்து வைத்துள்ள மாட்டு வண்டிகளை எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுருத்தி 21.3.2023 அன்று பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அடையாள உன்னாவிரத போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பேராவூரணி தொகுதியில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானனோர்கள் கலந்துக் கொண்டனர்.


செய்தி: த.நீலகண்டன் .

No comments:

Post a Comment

Post Top Ad