கபிஸ்தலம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தற்காலிக ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்து தீர்மானம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் சுமதி குணசேகரன் இவர் கடந்த (18.03.23) அன்று மரணமடைந்தார்
இதனைத் தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ஆகியோர் பார்வையாளராகவும் மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில் இன்று கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தற்காலிக தலைவராக
தற்போது துணை தலைவராக இருந்த மகாலட்சுமி கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராகவும் 8வது வார்டு உறுப்பினர் சரவணன் துணைத் தலைவராகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டத்தில் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மக்கள் நல பணியாளர் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment