அணைக்கரையில் கண்காணிப்பு கேமராக்கள் துவக்கம் மற்றும் வணிகர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கும் விழா டெல்டா கூட்டமைப்பு வணிகர் சங்கத்தினர் பாராட்டு தீர்மானம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன், இணைந்த ,டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பு சார்பாக மாநிலத் தலைவர் ஏ. எம். விக்கிரம ராஜா அறிவுறுத்தலின்படி , டெல்டா கூட்டமைப்பின் தலைவர் ச. முகமது சுகைல், செயலாளர் செவன் லெவன் ப.உதயகுமார், பொருளாளர் இரா. ரகுராமன், கௌரவத் தலைவர் க.அசோகன், சட்ட ஆலோசகர் R. சரவண பாரதி, தலைமையில் மற்றும் அணைக்கரை அனைத்து வணிகர் நல சங்கம் தலைவர் v. வாசுதேவன் , கௌரவத் தலைவர் G. பட்டாபிராமன், செயலாளர் p. G கனி, பொருளாளர் s. வைரவேல், வரவேற்புரை ஆற்ற மேலும் அணைக்கரை வணிகர்களுக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு அணைக்கரை வணிகர் சங்கம் பொறுப்பாளர்கள் துணைத் தலைவர்கள் G. சிவகுமார், M சாமிநாதன், P. சீனிவாசன்,இணைத் தலைவர்கள், P. நாகராஜ், K. M. R இளங்கோவன்,M. சம்பந்தம், துணை செயலாளர்கள் S. சிவக்குமார், B. சதீஷ்குமார், S. பன்னீர்செல்வம், இணை செயலாளர்கள், M. முருகேசன், K. செந்தில், G. ரமேஷ் ஆகியோர் இலவச விபத்து காப்பீடு வழங்கினார்கள், அதைத்தொடர்ந்து, டெல்டா கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஜமால் முகமது, பாரதி, பாலமுருகன்,ஹாஜா மைதீன், சரவணன், செல்வ சேகர், ஜாகிர் உசேன், கணேசன் மூர்த்தி, ரவிச்சந்திரன், செல்வகுமார்,அக்பர் அலி, பிரபாகரன், அருண், கரிகாலன், குமார், கருணாகரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் k. M. K சந்திரசேகரன் , செய்தி தொடர்பாளர் லுக்மான் உமர் முன்னிலையில் கண்காணிப்பு கேமராக்களுக்கு இரும்பு கம்பம் நடப்பட்டது.
இன்னும் ஒரு சில வாரங்களில் மாநிலத் தலைவர் ஏ எம் விக்கிரம ராஜா அவர்களால் கண்காணிப்பு கேமராக்கள் தத்துவாஞ்சேரி மற்றும் அணைக்கரையிலும் இயக்கி வைக்கப்படும் என்று கூறியதோடு இரண்டு வருடத்துக்கு முன் கிளை சங்கமான சோழபுரம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பால் நிறுவப்பட்டது இதனால் பல குற்றங்கள் கண்டறியப்பட்டு குற்றங்களை தடுக்க காவல்துறையினருக்கும் உறுதுணையாக இருந்தது,
மேலும் வணிகர்களும் பாதுகாப்பாக வணிகம் செய்தனர், கடந்த மூன்று மாதத்திற்கு முன் பந்தநல்லூரில் நடந்த டெல்டா கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜெகபர் சாதிக் அவர்கள் கலந்துகொண்டு கேட்டுக் கொண்டதின் பேரில் தத்துவாஞ்சேரியிலும் அணைக்கரையிலும் கேமரா அமைக்கப்படும் என்று அக்கூட்டத்தில் டெல்டா வணிகர் நல சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதன் தொடர்ச்சியாக தத்துவாஞ்சேரியில் பணி நிறைவடைந்தது இன்று அணைக்கரையில் கண்காணிப்பு கேமராவுக்கான கம்பம் நடப்பட்டு வேலை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment